Friday, January 21, 2011

ஹைக்கூ கவிதைகள்

நண்பர் கவிஞர். இளங்காடு திருமாறன் அவர்கள் விகடனுக்காக
அனுப்பிய ஹைக்கூ கவிதை தொகுப்பு. ஹைக்கூ என்பதை
தமிழில் சொல்வனம் என மொழிபெயர்த்திருக்கிறார்.

சொல்வனம்


எல்லாவற்றையும் அடகுவைத்தோம் .
நம்பிக்கையை
திருப்பிக்கொண்டு.


உற்பத்திகள் ஏராளம்
விற்பனை குறைவு
தமிழ்ப்பட்டதாரிகள்.


வசந்தக்கூரைகளுக்குள்
ஓட்டை போட்டது
வறுமைமழை.


கதவை திறந்ததும்
காற்றுடன் வந்தது
கொசு.


வியப்புக்குறிகள்
வினாக்குறிகளாயின
அவளின் அழைப்பிதழ் .


அக்காவின் கிழிந்த ஆடை
தரைமட்டமாகிபோனது
தங்கையின் ஆசை.


பூக்களுக்கு என்ன கவலை
காம்புகளுக்கு அல்லவா
கழுத்துவலி .

-இளங்காடு இரா.திருமாறன்.



Monday, August 23, 2010

நிலவு பாட்டு

நிலா, தாலாட்ட வைப்பதற்கும்,
சோறூட்ட வைப்பதற்கும்,
காதலுக்கும், கல்யாணத்திற்கும்,
சோகத்திற்கும்,
சந்தோசத்திற்கும் பயன்படும் நாயகியாகி விட்டது.
அவ்வாறான நிலவினை பற்றிய நம் மனதில் நிற்கும் சில பாடல்கள் இங்கே.

1 . நிலாவே வா - மௌன ராகம்
2 . நிலவு தூங்கும் நேரம் - குங்கும சிமிழ்
3 . இளைய நிலா - பயணங்கள் முடிவதில்லை
4 . ஜனவரி நிலவே - என் உயிர் நீதானே
5 . ஈர நிலா - அரவிந்தன்
6 . கொஞ்சும் நிலவு - திருடா திருடா
7 . நிலா காய்கிறது - இந்திரா
8 . வண்ண நிலவே - நினைத்தேன் வந்தாய்
9 . வெண்ணிலவே வெண்ணிலவே - மின்சார கனவு
10 . வெண்ணிலவே வெண்ணிலவே - காலமெல்லாம் காதல் வாழ்க
11 . வெண்ணிலவே வெண்ணிலவே - கண்ணன் வருவான்
12 . வெள்ளி நிலவே வெள்ளிநிலவே - நந்தவன தேரு
13 . இது ஒரு நிலாக்காலம் - டிக் டிக் டிக்
14 . பிள்ளை நிலா - நீங்கள் கேட்டவை
15 . நிலா அது வானத்து - நாயகன்
16 . நிலா காயும் நேரம் - செம்பருத்தி
17 . பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - இதயம்
18 . பட்டு நிலா மெட்டெடுத்து - வால்டர் வெற்றிவேல்
19 . கருப்பு நிலா நீதான் - என் ஆசை மச்சான்
20 . நிலா காயுது நேரம் நல்ல நேரம் - சகலகலா வல்லவன்
21 . ஓ வெண்ணிலா - குஷி
22 . ஓ வெண்ணிலா இரு வானிலா - காதல் தேசம்
23 . வானிலே தேன் நிலா - கக்கி சட்டை
24 . நிலவு பாட்டு நிலவு பாடு - கண்ணுக்குள் நிலவு
25 . கல்யாண தேன் நிலா - மௌனம் சம்மதம்
26 . அன்று வந்தது அதே நிலா - பெரிய இடத்து பெண்
27 . நிலா நீ வானம் காற்று - பொக்கிஷம்
28 . நிலவே நிலவே நில்லு நில்லு - நிலாவே வா
29 . மண்ணில் வந்த நிலவே - நிலவே மலரே
30 . ஆகாய வெண்ணிலாவே - அரங்கேற்ற வேளை
31 . நிலாவே.. வா வா - கோகுலத்தில் சீதை
32 . நிலவே நிலவே சரிகம - பெரியண்ணா
33 . வான் நிலா நிலா - பட்டின பிரேவேசம்
34 . நிலவுக்கு என் மேல் - போலீஸ்காரன் மகள்
35 . நீயில்லை நிலவில்லை - பூச்சூடவா
36 . முகம் ஒரு நிலா, விழி இரு நிலா - மனசுகேத்த மகாராசன்
37 . வெண்ணிலவே வெண்ணிலவே - லேடீஸ் & ஜென்டில்மென்
38 . வா வெண்ணிலா - மெல்ல திறந்தது கதவு
39 . உடையாத வெண்ணிலா - ப்ரியம்
40 . காதல் வெண்ணிலா - வானத்தை போல
41 . வெண்ணிலா வெளியே வருவாளா - உனக்காக எல்லாம் உனக்காக
42 . கலர்புல் நிலவு டிஜிட்டல் கனவு - டபுள்ஸ்
43 . வெண்ணிலவுக்கு வானத்த பிடிக்கலையா - தாலாட்டு பாடவா
45 . வெண்ணிலாவின் தேரில் ஏறி - டூயட்
46 . ஆயிரம் நிலவே வா - அடிமை பெண்
47 . நிலவே என்னிடம் நெருங்காதே - ராமு
48 . பாடு நிலாவே - உதய கீதம்
49 . நிலவே முகம் காட்டு - எஜமான்
50. மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம் -- முதல் இரவு
51 . வெண்ணிலவை முதல் நாள் இரவில் - உழைத்து வாழ வேண்டும்
52 . என் வானிலே ஒரே வெண்ணிலா - ஜானி
53 . சுடும் நிலவு - தம்பி
54 . என் இனிய பொன் நிலாவே - மூடுபனி
55 . நிலவை கொண்டு வா - வாலி
56 . நிலாவிலே நிலாவிலே - ஆஹா எத்தனை அழகு
57 . கண்களிலே ஒரு காதல் நிலா - பிஸ்தா
. நிலவோடும் மலரோடும் - பொன்மனம்
59 . நிலவும் மலரும் பாடுது - தேன் நிலவு
60 . வாராயோ வெண்ணிலவே - மிஸ்ஸியம்மா
61 . இரவும் நிலவும் வளரட்டுமே - கர்ணன்
62. நிலவு வந்தது நிலவு வந்தது - என்றும் அன்புடன்
63. நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா - உயர்ந்த மனிதன்
64. இரவு நிலவு உலகை ரசிக்க நினைத்தது - அஞ்சலி
65. வானிலா தேனிலா வாடை பூநிலா - கவிதை பாடும் அலைகள்
66. நிலவே நிலவே தாளம் போடு - தை பிறந்தாச்சு.
67. வளர்பிறை என்பதும் தேய்பிறை என்பதும் - திருமதி ஒரு வெகுமதி
68. அள்ளி அள்ளி வீசுதம்மா - அத்த மக ரத்தினமே
69. இன்பம் பொங்கும் வெண்ணிலா - வீரபாண்டிய கட்டபொம்மன்